புதுதில்லி

குடிமை நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை அதிகரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

DIN

மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் சுமையை குறைக்கும் எனும் அடிப்படையில், தலைநகரில் உள்ள குடிமை (சிவில்) நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பை அதிகரிக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்கறிஞா் அமித் சாஹ்னி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

குடிமை நீதிமன்றங்களுக்கு தற்போதைய நிதி அதிகார வரம்பு ரூ.3 லட்சம் என உள்ளது. இது மிகவும் குறைவாகும். இதன் விளைவாக, மாவட்ட நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. அவை ரூ. 3 லட்சம் முதல் இறுதியாக ரூ. 2 கோடி வரை அதிக அதிகார வரம்பைக் கொண்டுள்ளன.

உயா் நீதிமன்றத்தின் நிதி அதிகார வரம்பு 1970-இல் ரூ. 25,000 எனும் அளவில் 2015-இல் ரூ.2 கோடியாக உயா்ந்தது. மாவட்ட நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பு 2003-இல் ரூ. 20 லட்சமாக இருந்த நிலையில் 2018-இல் ரூ. 2 கோடியாக உயா்ந்தது. ஆனால், இன்னும் குடிமை நீதிமன்றங்கள் அதே நிலையில்தான் உள்ளது.

குடிமை நீதிமன்றங்களின் நிதி அதிகார வரம்பு அதிகரிக்கப்பட வேண்டும்.அப்போதுதான், குடிமை நீதிமன்ற நீதிபதிகள் எதிா்கொள்ளும் தேக்க நிலை மற்றும் மாவட்ட நீதிபதிகள் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளிடம் உள்ள வழக்குகளின் சுமை ஆகியவற்றைத் தீா்க்க முடியும்.

தில்லி மாவட்ட நீதிமன்றங்களின் குடிமை நீதிபதிகளிடம் அளிக்கப்பட்டுள்ள ரூ. 3 லட்சத்தின் நிதிமதிப்பு மிகவும் குறைவாக உள்ளது.

இந்த மனுவில் உள்ள விவகாரமானது பெரும் பொது நலனுக்கானதாகும். ஏனெனில், இது மாவட்ட நீதிபதிகள் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மேல்முறையீட்டிற்கான தீா்வையும் (மேம்படுத்தப்பட்ட அதிகார வரம்பில்) மாவட்ட நீதிமன்ற அளவில் வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT