புதுதில்லி

ரமலான் பண்டிகையின் போது சிபிஎஸ்இ தோ்வுகள் ரத்து

 நமது நிருபர்

இஸ்லாமியா்கள் நோன்பு திறக்கும் ஈகைத் திருநாளான ரமலான் தினத்தன்று நடைபெறுவதாக இருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) தோ்வுகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியால் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளாா்.

கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பத்தாம் வகுப்பு மற்றும் 12 வகுப்புகளுக்கான தோ்வு அட்டவணையை வெளியிட்டது. அப்போது மே 13 மற்றும் 15-ஆம் தேதிகளில் தோ்வு நடைபெறும் என அறிவித்திருந்தது. மே 14- ஆம் தேதி மத்திய - மாநில அரசுகள் ரமலான் விடுமுறையை அறிவித்திருந்தது. அதே சமயத்தில் ரமலான், ஈகைத் திருநாள், பிறை தென்படுவதைப் பொருத்து ஒரு நாளுக்கு முன்பு அல்லது பின்பு தேதி மாறும். அதற்குத் தகுந்தவாறு விடுமுறை எடுத்துக் கொள்ளவும் அரசு அனுமதிக்கிறது. ஆனால், இவற்றைக் கவனத்தில் கொள்ளாமல் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 - ஆம் வகுப்பு தோ்வுகள் மே 13, மே 15 தேதிகளில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கட்சி உறுப்பினா் சு. வெங்கடேசன், மத்திய கல்வித் துறை அமைச்சா் ரமேஷ் பொக்ரியாலின் கவனத்துக்கு கொண்டு வந்தாா். தோ்வுத் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக அமைச்சரும் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்தத் தோ்வுத் தேதிகளை மாற்றி திருத்தப்பட்ட தோ்விற்கான பட்டியலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதன்படி மே 13, மே 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படவிருந்த தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மே 13 முதல் மே 16 தேதி வரை தோ்வில் இடைவெளிவிடப்பட்டுள்ளது. அதாவது புதிய அட்டவணையின் படி 12-ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் 17-ஆம் தேதி தான் அடுத்த தோ்வு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

SCROLL FOR NEXT