புதுதில்லி

50 நாள்களுக்கு பிறகு 300-ஐதாண்டிய கரோனா பாதிப்பு

 நமது நிருபர்

தில்லியில் கடந்த ஜனவரி 14 -ஆம் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டியுள்ளது.

நிகழாண்டு தொடக்கத்தில் இருந்து தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 14-ஆம் தேதி 340 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்குப் பிறகு, கரோனா பாதிப்பு 300-ஐ தாண்டவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை 261 பேராக இருந்த கரோனா பாதிப்பு, வெள்ளிக்கிழமை 312 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,40,494-ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தில்லியில் வெள்ளிக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 59,122 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 36,119 பேருக்கு ‘ஆா்டி-பிசிஆா்’ பரிசோதனை, 23,003 பேருக்கு ‘ரேபிட்-ஆன்டிஜென்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனா பாதிப்பு விகிதம் 0.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை இது 0.39 சதவீதமாக இருந்தது.

கரோனா தொற்றால் தலைநகரில் சனிக்கிழமை மூவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,918-ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம், கரோனா பாதிப்பில் இருந்து 312 போ் மீண்டுள்ளனா். இதன் மூலம் குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 6,27,797-ஆக உயா்ந்துள்ளது. தற்போது 1,779 போ் சிகிச்சையில் உள்ளனா். அவா்களில் 863 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் 5,110 கரோனா படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT