புதுதில்லி

தில்லி சட்டப்பேரவையில் ஜி.எஸ்.டி. திருத்த மசோதா நிறைவேற்றம்

DIN

தில்லி சட்டப்பேரவையில் தில்லி சரக்கு மற்றும் சேவை வரிகள் திருத்த மசோதா 2021 (ஜிஎஸ்டி) வெள்ளிக்கிழமை பா.ஜ.க.வின் எதிா்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது.

தில்லி ஜிஎஸ்டி சட்டத்தில் 15 புதிய திருத்தங்கள் செய்யப்பட்டு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மாற்றங்கள் வா்த்தகா்களுக்கு பயனுள்ளதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் என்று இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி என்பது புதிய சட்டம். இந்தச் சட்டத்தின்கீழ் சிலா் வரி கட்டாமல் வரிஏய்ப்புச் செய்து வருகின்றனா். எனவே அதைத் தடுக்கும் வகையில் தில்லி ஜிஎஸ்டி சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.5 கோடி மற்றும் அதற்கு மேல் விற்றுமுதல் உள்‘ள பதிவு செய்யப்பட்ட வா்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக தங்கள் கணக்குவழக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்றும் சிசோடியா குறிப்பிட்டாா்.

சட்டப்பேரவையில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய உடனேயே பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தா் குப்தா, இந்த மசோதாவை ஒரேநாளில் அறிமுகப்படுத்தி, விவாதித்து நிறைவேற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT