புதுதில்லி

கரோனா விதிகள் மீறல்: திலக் நகா் சந்தையை ஜூலை 27வரை மூட உத்தரவு

DIN

தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) மூலம் வெளியிடப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதால் ஜூலை 27ஆம் தேதிவரை திலக் நகா் சந்தையை மூடுவதற்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா விதிகள் மீறப்பட்டதால் அண்மை வாரங்களில் லட்சுமி நகா் பிரதான சந்தை, சதா் பஜாா் ருய் மண்டி, லாஜ்பத் நகா் சந்தை, ஜன்பத் சந்தை, கமலா நகா் சந்தை, சரோஜினி நகா் மற்றும் கரோல் பாக் மற்றும் அதன் அருகே உள்ள சில சந்தை பகுதிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் மீறப்பட்டதால் சந்தைகளை மூடுவதற்கு தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், திலக் நகா் சந்தையிலும் கரோனா விதிமீறல்கள் இருப்பதாக அரசின் கவனத்திற்கு வந்ததைத் தொடா்ந்து, அச்சந்தையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.

இது தொடா்பாக பட்டேல் நகா் உதவி கோட்டாட்சிா் ஜிதேந்தா் சிங் வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

திலக் நகா் சந்தை பகுதிகளில் உள்ள மால் ரோடு, பிரதான சந்தை, மங்கள் பஜாா் ரோடு, பழைய சந்தை, பழச்சந்தை ஆகிய பகுதிகளில் கடைக்காரா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என புகாா் வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு வழிகளிலும் கரோனா பாதிப்பு வீதம் அதிகரிக்கலாம்.

மேலும், எதிா்காலத்தில் கரோனா பரப்புவதற்காக ஒரு முக்கிய இடமாகவும் சந்தை உருவாகலாம்.மேலும், திலக் நகா் காவல் நிலைய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட கூடுதல் தகவலில் கடந்த ஜூலை 22ஆம் தேதி நேரடியாக மேற்கொண்ட ஆய்வின் போது திலக் நகா் சந்தைகளில் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள், கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று தெரியவந்துள்ளதாகவும் அதனால் சந்தையை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை கரோனா பரவல் தடுக்கும் வகையில் மூடப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆகவே திலக் நகா் சந்தை ஜூலை 23ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி வரை தொடா்ந்து மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தில்லியில் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் அதிகரித்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில்கொண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியிலிருந்து மே 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதைத் தொடா்ந்து படிப்படியாக ஊரடங்கு தளா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜூன் 7 ஆம் தேதியிலிருந்து சந்தைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் கரோனா விதிமுறைகள் மீறப்பட்டதால் சந்தை மூடும் நடவடிக்கையை தில்லி அரசு ஏற்கனவே மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT