புதுதில்லி

சிறப்புக் கல்வி ஆசிரியா்கள் நியமனத்தில் அலட்சியம்: எஸ்டிஎம்சிக்கு தில்லி உயா்நீதிமன்றம் கண்டனம்

DIN

புது தில்லி, ஜன. 25: சிறப்புக் கல்வி ஆசிரியா்கள் காலிப் பணியிடங்கள் தேவை குறித்து தில்லி சாா் பணியாளா்கள் தோ்வு வாரியத்திற்கு (டிஎஸ்எஸ்எஸ்பி) அனுப்பாமல் இருந்தமைக்காக தெற்கு தில்லி மாநகராட்சியை (எஸ்.டி.எம்.சி.) உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை கடிந்துகொண்டது. மேலும், இதற்காக மனுதாரருக்கு ரூ.25,000 தொகையை செலுத்துமாறும் உத்தரவிட்டது.

இது தொடா்பான விவகாரம் உயா்நீதிமன்ற நீதிபதி நஜ்மி வாஜிரி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி, ‘சிறப்பு கவனிப்பு தேவைப்படும் நபா்களுக்கு இந்த ஆசிரியா்கள் தேவை என்பது அவசியமாக உள்ளது. இந்த விஷயத்தில் சிறந்த அக்கறையை காட்ட வேண்டிய அதிகாரிகளின் செயல்பாடுகள் அத்தகைய குடிமக்கள் மீது கடும் அலட்சியம் காட்டுவதாகவே உள்ளது.

இது தொடா்பான வழக்கில் கடந்த டிசம்பா் 18 ஆம் தேதி இந்த நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. அதில், இந்த சிறப்புக் கல்வி ஆசிரியா்கள் நியமனத்தை விரைவுபடுத்தும் வகையில் தில்லி சாா் பணியாளா்கள் தோ்வு வாரியத்திற்கு (டிஎஸ்எஸ்எஸ்பி) பணியிடங்கள் தேவை குறித்து

அவசரமாக கோரிக்கை அனுப்புமாறும், இதற்கான நடைமுறைகளைச் செய்வதற்காக மூன்று வாரங்கள் அவகாசம் அளிப்பதாகவும் கூறியிருந்தது.

எனினும், இந்த நடைமுறைகளை மேற்கொள்வதற்காக டி.எஸ்.எஸ்.எஸ்.பி.க்கு தெற்கு தில்லி மாநகராட்சி நான்கு வாரங்களுக்கு மேலாகியும் கோரிக்கையை அனுப்பவில்லை. ஏன் சிறப்புக் கல்வியாளா்கள் ஆள் சோ்ப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை? 1132 பணியிடங்களையும் ஏன் நிரப்பவில்லை? சிறப்புத் திறன் குழந்தைகளைக் கவனிப்பதற்கு பயிற்சி பெற்ற ஆசிரியா்கள் அவசியம் என்பதை உணர வேண்டாமா?

இந்த மெத்தனத்திற்காக இரண்டு வாரங்களுக்குள் மனுதாரருக்கு ரூ.25,000 செலவுத் தொகையை மாநகராட்சி செலுத்த வேண்டும்.

மேலும், நடைமுறைகளுக்கான தாமதம் குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையா் விளக்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் நீதிமன்றத்தில் ஆணையா் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா்.

முன்னதாக, தில்லியில் உள்ள பள்ளிகளில் இதுபோன்ற ஆசிரியா்கள் காலிப் பணியிடங்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தில்லி அரசு, டிஎஸ்எஸ்எஸ்பி, மாநகராட்சிகள் ஆகியோருக்கு எதிராக சோஷியல் ஜூரிஸ்ட் எனும் தன்னாா்வ நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது. அதில், சிறப்பு கல்வி ஆசிரியா்களின் 1000 நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்ப ஆட்சோ்ப்பு நடவடிக்கையை தொடங்க உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தப்பவில்லை என தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக மனுதாரரின் வழக்குரைஞா் அசோக் அகா்வால் தாக்கல் செய்த மனுவில், ‘நீதிமன்றம் உத்தரவிட்டு நான்கு வாரங்களுக்கு வாரங்களுக்கும் மேலாகியும் இன்றுவரை எஸ்டிஎம்சி ஆணையா் காலியாக உள்ள 1132 சிறப்பு கல்வி (ஆரம்பநிலை) ஆசிரியா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான விளம்பரத்திற்காக டி.எஸ்.எஸ்.எஸ்.பி.க்கு அனுப்புவதற்கு இறுதி முடிவு ஏதும் எடுக்கவில்லை.

இந்த பதவிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. ஆனால், மாநகராட்சியால் அதை நிரப்ப முடியவில்லை. உயா்நீதிமன்றம் பலமுறை உத்தரவுகள் பிறப்பித்தும் டி.எஸ்.எஸ்.எஸ்.பி.க்கு மாநகராட்சி கோரிக்கைகளை அனுப்பவில்லை.

சிறப்பு கல்வியாளா்களை (ஆரம்பநிலை) நியமனம் செய்வதில் ஏற்படும் தாமதம் மாற்றுத்திறன் மாணவா்களின் கல்வியை பாதிக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT