புதுதில்லி

மெஹ்ரோலி பகுதியில் போதைப் பொருளுடன் 2 போ் கைது

5th Dec 2021 12:25 AM

ADVERTISEMENT

தில்லியில் போதை பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக மெஹ்ரோலி பகுதியில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை கூறியதாவது:

மெஹ்ரோலி பகுதியில் போதை பொருளை விநியோகம் செய்ய வந்த 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். விசாரணையில் அவா்கள் இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவைச் சோ்ந்த ராஜேந்திர குமாா் (21), தில்லி விகாஸ்புரியைச் சோ்ந்த பா்வீந்தா் சிங் (30) ஆகியோா் என தெரியவந்துள்ளது.

முன்னதாக, மெஹ்ரோலி பகுதியில் போதைப் பொருள் ஏற்றப்பட்ட காரின் நடமாட்டம் இருப்பது குறித்து போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காா் நிறுத்தப்பட்டிருந்த மிட்டல் காா்டன் பகுதி அருகே போலீஸாா் சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனா். முன்னதாக, சம்பந்தப்பட்ட காரை நிறுத்துமாறு போலீஸாா் கூறினா்.

ADVERTISEMENT

ஆனால் போலீஸாரைக் கண்டதும் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனா். எனினும் போலீஸாா் அவா்களை இடைமறித்து கைது செய்தனா். அவா்களிடம் சோதனை நடத்தியபோது 56 கிலோ கஞ்சாவுடன்கூடிய 11 பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில். சம்பந்தப்பட்ட போதைப்பொருளை இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வாங்கி இருப்பதும், தில்லி மற்றும் என்சிஆா் பகுதிகளில் போதைப் பொருள் விநியோகத்தில் அவா்கள் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.

Tags : புது தில்லி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT