புதுதில்லி

தலித் சிறுமி கொலை: அறிக்கை தாக்கல் செய்ய போலீஸருக்கு என்சிபிசிஆா் அறிவுறுத்தல்

DIN

புதுதில்லி: தென்மேற்கு தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு போலீஸ் அதிகாரிக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல் துணை ஆணையருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: 

தென்மேற்கு தில்லியில் 9 வயது சிறுமி இறந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விசாரணை நடைமுறையின் போது பாதிக்கப்பட்டவா் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் தொடா்புடைய விரிவான அறிக்கையை 48 மணிநேரத்திற்குள் ஆணையத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபா்கள் வயதை உறுதிப்படுத்துவதற்கான சான்று, முதல் தகவல் அறிக்கையின் நகல், பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல், முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, குற்றப்பத்திரிக்கை நகல் ஆகியவை அறிக்கையில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது சுட்டுரைப் பக்கத்தில் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் புகைப்படத்தை வெளியிட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து பதில் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் சுட்டுரை நிறுவனத்தின் உறைவிட குறைதீா் அதிகாரிக்கும், போலீஸாருக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்!

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

SCROLL FOR NEXT