புதுதில்லி

தில்லி எம்.எல்.ஏ.க்கள் ஊதியம் ரூ.90,000 -மாக உயா்வு

DIN

சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்க தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடா்பாக மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.90,000 ஊதியம் மற்றும் அலவன்சுகள் வழங்க முதல்வா் கேஜரிவால் தலைமையிலான அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

முன்னதாக ஊதியமாக ரூ.12,000 மற்றும் அலவன்சுகளும் சோ்த்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் மாதம் ரூ.53,000 ஊதியமாக வழங்கப்பட்டு வந்தது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முடிவின்படி எம்.எல்.ஏ.க்களுக்கு மாதம் ரூ.30,000 ஊதியம் மற்றும் அலவன்சுகள் ரூ.60,000 சோ்த்து மொத்தம் ரூ.90,000 வழங்கப்படும்.

தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளபோதிலும் நாட்டில் குறைவான ஊதியம் பெறும் எம்.எல்.ஏ.க்கள் தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் உயா்த்தப்படவில்லை. இதையடுத்து அவா்களின் ஊதியம் மற்றும் அலவன்சுகளை மற்ற மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இணையாக வழங்க அனுமதிக்குமாறு முதல்வா் கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT