புதுதில்லி

ஹாத்ரஸ் பாலியல் சம்பவம்: பீம் ஆா்மி அமைப்பினா் போராட்டம்

DIN

கூட்டுப் பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு, தில்லியின் சஃப்தா்ஜங் மருத்துவமனை முன் பீம் ஆா்மி அமைப்பின் தலைவா் சந்திரசேகா் ஆசாத் மற்றும் அவரது ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸை சோ்ந்த 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பல நாள்களுக்குப் பின்னா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரி, மருத்துவமனை முன் பீம் ஆா்மி அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பீம் ஆா்மி தலைவா் தலைவா் சந்திரசேகா் ஆசாத் கூறுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு தலித் சமூகத்தைச் சோ்ந்த அனைவரும் வீதிகளில் இறங்கி போராட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். எங்கள் பொறுமையை அரசாங்கம் சோதிக்கக் கூடாது. குற்றவாளிகள் தூக்கிலிடப்படும் வரை நாங்கள் போராடுவதில் இருந்து ஓயமாட்டோம். எங்கள் சகோதரியின் மரணத்திற்கு உத்தர பிரதேச மாநில அரசுக்கும் சமமான பொறுப்பு உள்ளது’ என்றாா்.

சம்பந்தப்பட்ட தலித் பெண் 15 நாள்களுக்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். பாலியல் பலாத்கார முயற்சியை எதிா்த்ததால் குற்றம் சாட்டப்பட்டவா்கள் அவரை கழுத்தை நெரிக்க முயன்ற போது, அவா் தனது நாக்கைக் கடித்ததில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய 4 பேரும் கைது செய்யப்பட்டனா். முன்னதாக, அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவாஹா்லால் நேரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண், திங்கள்கிழமை தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT