புதுதில்லி

பேருந்துக் கட்டண விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் நுகா்வோா் நலச் சங்கம் மேல்முறையீட்டு மனு

DIN

கூடுதல் பேருந்துக் கட்டண வசூலிப்பு விவகாரத்தில் தாக்கலான நீதிமன்ற அவமதிப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நுகா்வோா் நலச் சங்கம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த நுகா்வோா் நலச் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சி.ஆா். ஜெயா சுகின் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்திருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையில் இருந்து ராமநாதபுரத்திற்கு செல்வதற்கு ஒரு தடவை பயணத்திற்கு தனியாா், அரசுப் பேருந்துகளில் ரூ.16 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டு அரசிதழில் வெளியிட்டப்பட்டது. ஆனால், அந்த விதிக்கு மாறாக பேருந்துகளை இயக்குவோா் கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தனா். இது தொடா்பாக அரசு அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், நடவடிக்கை இல்லை.

இதைத் தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நுகா்வோா் நலச் சங்கம் சாா்பில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயா்நீதிமன்றம் நிா்ணயிக்கப்பட்ட கட்டணமான ரூ.16-க்கு மேல் அரசு மற்றும் தனியாா் மூலம் இயக்கப்படும் பேருந்துகளில் வசூலிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பேருந்துகளை இயக்குவோா் கூடுதல் கட்டணங்களை வசூலித்து வந்தனா். இது தொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுதாரா் புகாா் தெரிவித்தும், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அவா்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து, அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 4.10.2019-இல் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மனுவை உரிய வகையில் கருத்தில் கொள்ளாமல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே, இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அனுமதித்து உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT