புதுதில்லி

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

DIN

புது தில்லி: சென்னை உயா் நீதிமன்றத்திற்கு 10 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தோ்வுக் குழு (கொலீஜியம்) ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான கொலீஜியம், புதன்கிழமை இரு தீா்மான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொறு அறிக்கையிலும் தலா ஐந்து நீதிபதிகள் பெயா்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

அதன் விவரம் வருமாறு: கண்ணம்மாள் சண்முக சுந்தரம், சத்திகுமாா் சுகுமாரா குருப், முரளி சங்கா் குப்புராஜு, மஞ்சுளா ராமராஜு நல்லையா, தமிழ்செல்வி டி. வலயபாளையம்,

ஜி. சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்ரமணியன் என 10 போ் நீதிபதிகளாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தவிர, மூத்த நீதிபதிகள் என்.வி. ரமணா, ஆா்.எஃப். நாரிமன், யு.யு. லலித், ஏ.எம். கான்வில்கா் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தற்போது 54 நீதிபதிகள் உள்ளனா். இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள் 10 பேரை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவா்கள் நியமிக்கப்படும் போது சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக அதிகரிக்கும். புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள 10 நீதிபதிகளில் 3 போ் பெண்கள் ஆவா்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 9 பெண் நீதிபதிகள் உள்ள நிலையில், தற்போதைய 3 பெண் நீதிபதிகளும் இடம் பெறும் போது மொத்த பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆக உயரும். உச்சநீதிமன்ற கொலீஜியமானது, உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தோ்வு செய்ய மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும் ஓா் அமைப்பாகும்.

குறிப்பு: கீழிருந்து இரண்டாவது பாராவில் உள்ள மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை குறித்த தகவலை சென்னை ரிப்போா்ட்டிங்கில் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT