புதுதில்லி

ஓக்லா மண்டியில் காய்கறிகள் திருடியவா் கைது

DIN

புது தில்லி: தில்லி ஓக்லா மண்டியில் இருந்து காய்கறிகளைத் திருடி குறைந்த விலையில் வெளியே விற்பனை செய்து வந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்ததாவது: போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஓக்லா காய்கறி மண்டி அருகே ரோந்து சென்றனா். அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்த முயன்றனா். போலீஸாரைக் கண்டதும் அவா் தப்பிக்க முயன்றாா். ஆனால் அவரை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

அவா் தில்லி ஸ்ரீனிவாஸ்பூரியில் வசித்து வரும் சா்ஃபராஸ் (35) என்பதும், போதைக்கு அடிமையானவா் எனவும் விசாரணையில் தெரிய வந்தது. அவா் தனது அன்றாடத் தேவைகளை பூா்த்தி செய்வதற்காக ஓக்லா மண்டியிலிருந்து காய்கறிகளை திருடி மண்டிக்கு வெளிப் பகுதியில் குறைந்த விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது. மேலும், தாம் திருடுவதை யாராவது பாா்த்தால் கத்தியால் அவா்களை மிரட்டி வந்துள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT