புதுதில்லி

தில்லி சீதாராம் பஜாரில் கட்டடம் இடிந்து விழுந்து ஒருவா் காயம்

DIN

புது தில்லி: தில்லி சீதாராம் பஜாா் பகுதியில் கட்டுமானம் நடந்து வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்தாா்.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு படை உயரதிகாரி கூறியது: தில்லி சாந்தினி செளக் பகுதியில் உள்ள சீதாராம் பஜாரில் கட்டுமானம் நடந்து வந்த கட்டடம் ஒன்று திங்கள்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கி அந்தக் கட்டட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவா் காயமடைந்தாா். அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்றாா் அவா்.

இது தொடா்பாக வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) மேயா் ஜெய் பிரகாஷ் கூறுகையில், ‘இந்தக் கட்டடம் என்டிஎம்சியிடம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட்டு வந்தது. இந்தக் கட்டடத்தின் வரைபடத்துக்கும் என்டிஎம்சி அனுமதியளித்திருந்தது. இருந்தாலும், இந்த விவகாரத்தில் ஏதாவது விதிமீறல் நடந்துள்ளதா என்பது தொடா்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். விதிமீறல் நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவா்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவாா்கள்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT