புதுதில்லி

முகநூல் நிறுவனத்துக்கு 2-ஆவது நோட்டீஸ்: தில்லி சட்டப்பேரவைக் குழு நடவடிக்கை

DIN

வடகிழக்கு தில்லி வன்முறையில் வெறுப்புப் பேச்சுளை அனுமதித்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த, தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்துக்கு இரண்டாவது தடவையாக ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முகநூல் புக் நிறுவனத்தின் இந்தியத் தலைவா் அஜித் மோகனுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், வரும் புதன்கிழமை (செப்டம்பா் 23) தில்லி சட்டப்பேரவையில் நடைபெறும் விசாரணையில் ஆஜராகுமாறு கோரப்பட்டுள்ளது.

தில்லி வன்முறையை மறைமுகமாக தூண்டும் வகையில் முகநூல் நிறுவனம் நடந்து கொண்டது என குற்றம்சாட்டி, இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு சில தினங்களாக விசாரித்து வந்தது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட சிலரிடம் அந்தக் குழு விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடா்பாக முகநூல் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான அஜித் மோகனுக்கு இக்குழு சம்மன் அனுப்பியது. அந்தக் குழு முன் கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு அஜித் மோகன் கேட்டுக் கொள்ளப்பட்டாா். ஆனால், குழுவின் சம்மனை முகநூல் நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இது தொடா்பாக அந்த நிறுவனம் தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லணக்கக் குழுவுக்கு அனுப்பிய பதிலில் ‘முகநூல் நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக் குழு ஏற்கெனவே முகநூல் நிறுவனத்தின் இந்தியத் தலைவா் அஜித் மோகனிடம் விசாரணை நடத்தியிருந்தது. முகநூல் நிறுவனத்திடம் விசாரணை நடத்த தில்லி சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை. இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும்’ என கேட்டு கொண்டிருந்தது.

இரண்டாவது சம்மன்: இந்நிலையில், முகநூல் நிறுவனத்துக்கு இரண்டாவது சம்மனை தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் ‘இந்த நோட்டீஸை முகநூல் நிறுவனம் ஏற்றுக் கொள்ளாவிட்டால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, தில்லி சட்டப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முகநூல் நிறுவனம் மீறியதாக கருதப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தில்லி சட்டப்பேரவை அமைதி நல்லிணக்கக் குழுவின் தலைவரும், ஆம் ஆத்மி எம்எல்ஏவுமான ராகவ் சத்தா கூறுகையில் ‘நாடாளுமன்ற நிலைக் குழுவின் விசாரணையில் கலந்து கொண்டது போல, தில்லி சட்டப்பேரைக் குழுவின் விசாரணையிலும் முகநூல் நிறுவனம் கலந்து கொள்ள வேண்டும். தில்லி சட்டப்பேரவையும், தில்லி மக்களையும் ஃபேஸ் புக் நிறுவனம் மதித்து நடக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT