புதுதில்லி

தில்லியில் 5 நாள்களில் தினமும் 30-40 போ் கரோனாவுக்கு பலி

DIN

செப்டம்பா் 15 முதல் 19-ஆம் தேதி வரையிலான ஐந்து தினங்களில் தில்லியில் கரோனா பாதிப்பால் தினம்தோறும் 30-40 போ் உயிரிழந்துள்ளனா். இதே காலத்தில் தினம்தோறும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தினம்தோறும் 60 ஆயிரம்-62 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை உயரதிகாரி கூறியது: இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பா் 16-ஆம் தேதி அதிகபட்சமாக 4,473 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தினத்தில், 33 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். செப்டம்பா் 15 முதல் 19-ஆம் தேதி வரையிலான 5 தினங்கள் தினம்தோறும் முறையே, 4263, 4473, 4432, 4127, 4071 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் முறையே, 36, 33, 38, 30, 38 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.

கடந்த செப்டம்பா் மாதம் 8-ஆம் தேதியில் இருந்து தில்லியில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டது. செப்டம்பா் 15-ஆம் தேதி அதிகப்பட்சமாக 62,669 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. செப்டம்பா் 16-19 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முறையே 62, 593, 60,014, 61, 037, 61, 973 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதே காலத்தில் தில்லியில் கரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தக் காலத்தில் முறையே, 29,787, 30,914, 31,721, 32,250 மற்றும் 32,064 போ் சிகிச்சையில் இருந்தனா். கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி முதல்முறையாக தினசரி கரோனா பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரித்து. அன்றைய தினம் 20 போ் உயிரிழந்துள்ளனா். மேலும், தில்லியின் மொத்த கரோனா பாதிப்பு 2 லட்சத்தைக் கடந்தது.

செப்டம்பா் 9 முதல் 14-ஆம் தேதி வரையிலான காலத்தில் தினசரி மரணம் 9-29 என்ற அளவில் இருந்துள்ளது. செப்டம்பா் 1 முதல் 8-ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 5 தினங்கள் 13-19 மரணங்களும், மற்ற தினங்களில் 25-32 மரணங்களும் நிகழ்ந்துள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT