புதுதில்லி

மேலும் 27,500 டன் பொட்டாஷியம் உரம் இறக்குமதி

 நமது நிருபர்

புது தில்லி: விவசாயிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், மூன்றாவது தடவையாக 27,500 மெட்ரிக் டன் பொட்டாஷியம் உரம் இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளதாக மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனமான ஃபொ்டிலைசா்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் திருவாங்கூா் நிறுவனம் (ஃபேக்ட்) இதை இறக்குமதி செய்துள்ளது.

இது குறித்து இந்த அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளதாவது: மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் (பொட்டாஷியம் குளோரைட்) என்னும் உரத்தை ஏற்றி வந்த மூன்றாவது கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த திங்கள்கிழமை வந்தடைந்தது. இந்த ஆண்டில் காரீப் பருவத்தில் விவசாயிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக ஏற்கெனவே இரண்டு கப்பல்களில் மியூரியேட் ஆஃப் பொட்டாஷியம், ஒரு தொகுப்பு என்பிகே (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம்) உரத்தையும் ஃபேக்ட் நிறுவனம் இறக்குமதி செய்தது.

இந்த நிலையில், தற்போது மேலும் 27,500 மெட்ரிக் டன்கள் பொட்டாஷியம் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. உரங்கள் இறக்கப்பட்டு மூட்டைகளில் கட்டும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம், இந்த வருடத்தில் மொத்தம் 82,000 டன் பொட்டாஷியம் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT