புதுதில்லி

இந்திர பிரஸ்தா பல்கலை.யில் 9 படிப்புகளில் 1,330 இடங்களை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை

DIN

புது தில்லி: இந்திரப் பிரஸ்தா (ஐபி) பல்கலைக்கழகத்தில் நிகழாண்டில் இருந்து 9 படிப்புகளில் 1,300-க்கும் மேற்பட்ட புதிய இடங்களை அதிகரிக்க தில்லி அரசு நடவடிக்கை எடுத்தள்ளதாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: நிகழ் (2020-21) கல்வி ஆண்டில் குரு கோபிந்த் சிங் இந்திர பிரஸ்தா (ஐபி) பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள 9 படிப்புகளில் 1,330 புதிய இடங்களை தில்லி அரசு சோ்த்துள்ளது. கரோனா தொற்று சூழல் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு பள்ளியில் தோ்ச்சி பெற்று உயா் கல்வியைத் தொடர விரும்பும் மாணவா்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாகும். ஐபி பல்கலைக்கழகத்தின் இணைவிப்புக் கல்லூரிகளில் தற்போதுள்ள இளங்கலை மற்றும் பட்டதாரி நிலையிலான 9 படிப்புகளில் இந்தப் புதிய இடங்கள் சோ்க்கப்படும். இந்த 1,330 இடங்களில், அதிகபட்சமாக பி.டெக். படிப்புக்கு 630 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

9 படிப்புகளுக்கான கூடுதல் இடங்களாக பி.வோக். (20 இடங்கள்), பி.பி.ஏ. (120 இடங்கள்), பி.காம். (220 இடங்கள்), பி.ஏ. பொருளாதாரம் (120 இடங்கள்), பி.சி.ஏ. (90 இடங்கள்), எம்.பி.ஏ. ( 60 இடங்கள்), எம்.எஸ்.சி. யோகா (15 இடங்கள்), எம்.வோக் (55 இடங்கள்) ஆகிய படிப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுதல் இடங்கள் அறிமுகப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஆண்டில் மாணவா்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் ஒரு முயற்சியாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT