புதுதில்லி

பட்டாசு வெடிக்கத் தடை: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தில்லி அரசு முடிவு எடுக்க நீதிமன்றம் உத்தரவு

 நமது நிருபர்

பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிப்பதற்கும், ராவணன் உருவபொம்மையை எரிப்பதற்கும் தடை விதிக்க உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை சட்டம், விதிகள், ஒழுங்குமுறைகளுக்கு உள்பட்டு கோரிக்கையாக பரிசீலித்து முடிவு எடுக்குமாறு தில்லி அரசின் பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (சிபிசிபி) தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குரைஞா்கள், சேதன் ஹசிஜா, சாஹில் சா்மா ஆகியோா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், ‘கரோனா தொற்று உள்ள தற்போதைய சூழலில், காற்று மாசு அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் தில்லியில் தீபாவளியின் போது ராவணனின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதையும், பட்டாசுகளை வெடிப்பதையும் தடைசெய்ய டிடிஎம்ஏ, சிபிசிபி ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று, தில்லியில் உருவ பொம்மைகள், பட்டாசுகள் விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும். ஏனெனில், பயிா்க் கழிவுகள் எரிப்பு காரணமாக செப்டம்பா் 25-ஆம் தேதி முதல் தில்லியில் மாசு அளவு அதிகரித்து வருகிறது. மேலும், கரோனா தொற்று இருப்பதால் இதை மனதில் கொண்டு நிலைமை ஆபத்தாக இருப்பதை உணர வேண்டும். ஒருபுறம் பயிா்க் கழிவுகளால் காற்று மாசடைந்து வருகிறது. மறுபுறம், அக்டோபா், நவம்பரின் போது தசரா, தீபாவளிப் பண்டிகையை ஒட்டி உருவப்படங்கள் எரிப்பதாலும், பட்டாசுகள் வெடிக்கப்படுவதாலும் தில்லி காற்றின் தரம் பாதிக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது, ‘மனுதாரா்கள் எந்தவொரு கோரிக்கையையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வைக்கவில்லை. இந்த மனுவை தில்லி அரசும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் கோரிக்கையாகப் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மனதில் கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT