புதுதில்லி

ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி

DIN

காற்று மாசுவை ஏற்படுத்தியதற்காக ஆலையை மூடுமாறு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி ஹரியாணாவை சோ்ந்த தனியாா் தொழில் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தள்ளுபடி செய்தது. தூய்மையான சூழலில் வசிப்பவா்களின் உரிமையை தோற்கடிக்க முடியாது என்று தீா்ப்பாயம் தெரிவித்தது.

மாசு விதிகளை மீறியதாகக் கூறி ஹரியாணாவைச் சோ்ந்த எஸ்எஸ்எஃப் பாலிமா்ஸ் நிறுவனத்தின் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செப்டம்பா் 29-ஆம் தேதி தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி சம்பந்தப்பட்ட ஆலையின் சாா்பில் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், ஆலை இயங்குவதற்கான அனுமதி, ஆலை அமைக்கப்பட்ட 2012-இல் இருந்து தொடங்குகிறது. ஆனால், உத்தரவில் 2008, ஜூலை 30 என பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தீா்ப்பாயத் தலைவா் - நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: மனுதாரின் ஆலை நிபந்தனை விதிகளை மீறும் வகையில், காற்றின் தர அளவீடுகளை மீறும் வகையிலும் செயல்பட்டு வந்திருப்பது நிபுணா் குழுவால் கண்டறியப்பட்டுள்ளது. ஆலை இயங்கிவரும் பகுதியில் உள்ளவா்கள் தூய சுற்றுச்சூழலை பெறுவதற்கான உரிமையை இந்த கோரிக்கை மனு மூலம் தோற்கடிக்க முடியாது. ஆகவே, ஆலை 2012-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு செயல்பட அனுமதி ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்கூட , இந்த மறுஆய்வு விண்ணப்பத்தில் எந்தத் தகுதியும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இதனால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எனினும், ஆலையை மாற்றுவதற்கான கால அவகாசம் கோருவதற்காகக் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை மனுதாரா் அணுகலாம். இதை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தானாகவே தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT