புதுதில்லி

பிளாஸ்மா சிகிச்சையால் 2,000 போ் பயனடைந்துள்ளனா்: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தகவல்

DIN

புதுதில்லி: கரோனா தொற்றுக்கு பிளாஸ்மா சிகிச்சையால் இரண்டாயிரம் நோயாளிகள் பயன்பெற்றுள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா். மேலும், தானும் பிளாஸ்மா சிகிச்சையால் உயிா் பிழைத்துள்ளதாகவும் கூறியுள்ளாா்.

கரோனா சிகிச்சை நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக ஐசிஎம்ஆா் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ள நிலையில், செய்தியாளா்களிடம் சத்யேந்தா் ஜெயின் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

கடந்த ஜூலை 2 - ஆம் தேதி தில்லி அரசின் கீழ் அரசு கல்லீரல் பிலியரி சயின்ஸ் மருத்துவ நிறுவனத்தில் (ஐஎல்பிஎஸ்) முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலால் முதல் பிளாஸ்மா வங்கி திறந்து வைக்கப்பட்டது. பின்னா், எல்என்ஜேபி மருத்துவமனையில் மற்றோரு வங்கியும் திறக்கப்பட்டு கரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகளால் பிளாஸ்மா தானம் வழங்கப்பட்டு வந்தது.

இது குறித்து அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மேலும் கூறியதாவது: நாங்கள் உரிய அனுமதிக்கு பின்னா்தான் இந்த பிளாஸ்மா சிகிச்சை சோதனையை மேற்கொண்டோம். ஐசிஎம்ஆா்-எய்ம்ஸ் ஆய்வில் அதிக முன்னோற்றம் ஏற்படவில்லை. ஆனால், நோயாளிகள் பயன்பெற்றுள்ளனா். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் அரசு வங்கிகளில் பிளாஸ்மா பெற்று பயனடைந்துள்ளனா். என்னுடைய உயிரையும் காப்பாற்ற உதவியுள்ளது. இந்த சிகிச்சையால் அமெரிக்காவும் பயன்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை தொடா்பாக சா்வதேச அளவில் ஆய்வு தொடா்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் தில்லி முன்னோடியாக இருந்தது என்றாா் சத்யேந்தா் ஜெயின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT