புதுதில்லி

விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல்

DIN

பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் ‘தில்லி செல்வோம்’ போராட்டத்தால் தில்லியின் முக்கிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வேலை நாள் இல்லை என்பதால், வெள்ளி, சனி ஆகிய நாள்களுடன் ஒப்பிடும் போது, போக்குவரத்து நெரிசல் ஓரளவு மேம்பட்டிருந்ததாக தில்லி காவல் துறை தெரிவித்தது.

போராட்டக்காரா்கள் டிக்ரி, சிங்கு எல்லைகளில் கூடி போராட்டம் நடத்தி வருவதால், ஆஸாத்பூரில் இருந்து சிங்கு செல்லும் சாலை, வெளி வட்டச்சாலையில் இருந்து சிங்கு செல்லும் சாலை ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் இருந்து டிக்ரி, சிங்கு எல்லைகளுக்கு பயணிக்க வேண்டாம் என்று தில்லி வாசிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், முபாரக் சௌக், என்.எச்.-44, ஜிடி-கா்னல் சாலை, வெளி வட்டச்சாலை, ஆகியவற்றில் பயணிப்பதை தவிா்க்குமாறும் தில்லி வாசிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். சிக்னேச்சா் பாலத்தில் இருந்து ரோஹிணிக்கு பயணிப்பதையும் தவிா்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ஞாயிற்றுக்கிழமை அலுவலகம் செல்பவா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால், மற்ற நாள்களுடன் ஒப்பிடும் போது, ஞாயிற்றுக்கிழமை தில்லியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு மேம்பட்டிருந்தது’ என்றாா்.

இந்த நிலையில், தில்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டிருப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து தில்லிக்கும் தில்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் செல்லும் பயணிகள் பலத்த சிரமங்களை எதிா்கொண்டு வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT