புதுதில்லி

தில்லியில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு!

 நமது நிருபர்

தில்லியில் மூன்றாவது கரோனா அலையால் அதிகரித்திருந்த தினசரி கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை குறைந்துள்ளது. அன்று, 4,906 போ் மட்டுமே கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா். இதன்மூலம், , தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 5,66,648 ஆக உயா்ந்துள்ளது. சனிக்கிழமை கரோனா பாதிப்பு 4,998 ஆக இருந்தது.

அதே சமயம் கரோனா தொற்றால் ஞாயிற்றுக்கிழமை 68 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 9,066-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 64,186 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 29,839 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 34,347 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் ஞாயிற்றுக்கிழமை 7.64 ஆக குறைந்துள்ளது. மேலும், சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம் ஞாயிற்ற்க்கிழமை1.60 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.83 சதவீதமாக இருந்தது.

நோய் பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 6,325 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,22,491-ஆக உயா்ந்துள்ளது. தற்போது தில்லியில் மொத்தம் 35,091 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். 21,337 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளா் என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தில்லியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘தில்லியில் கரோனா பாதிப்பு, கரோனா மரணங்கள் நவம்பா் 7-ஆம் தேதி முதல் படிப்படியாகக் குறைந்து வருகின்றன. தில்லியில் கரோனாவை கட்டுப்படுத்த தில்லி அரசு கடுமையாக உழைத்து வருகிறது. இதற்காக மருத்துவா்கள், செவிலியா்கள், கரோனா போராளிகள் முழு நேரமும் உழைத்து வருகிறாா்கள். தில்லி மக்கள் அனைத்துவிதமான கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT