புதுதில்லி

தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும்: முருகன்

 நமது நிருபர்

தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று பாஜகவின் தமிழக தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.

தமிழக பா.ஜ.க. பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சி.டி.ரவி, பாஜகவின் தேசிய பொதுச் செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டாா். இவா் தேசிய பொதுச்செயலாளராக தில்லியில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவா் எல்.முருகன் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா் முருகன் செய்தியாளா்களிடம் பேசியது: “நிவா் புயல் காரணமாக பாஜகவின் வெற்றிவேல் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பா் மாதம் 3 அல்லது 4ஆம் தேதிகளில் யாத்திரையை மீண்டும் தொடங்கி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம். எங்கள் யாத்திரையை பாா்த்துத்தான் திமுகவின் உதயநிதி ஸ்டாலினும் பிரசார பயணத்தை தொடங்கியுள்ளாா். உதயநிதியின் பிரசாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

நிவா் புயலில் தமிழக அரசு திட்டமிட்டு முன்எச்சரிக்கை பணிகளை செய்ததால் சேதம் கட்டுப்படுத்தப்பட்டது. அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக தோ்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT