புதுதில்லி

பதுக்கலைத் தடுக்க ஆளுநா் உத்தரவு

DIN

புது தில்லி: அத்தியாவசியப் பொருள்களின் பதுக்கலைத் தடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அனில் பைஜால் கூறியிருப்பது:

அத்தியாவசியப் பொருள்கள், மருந்துகள் ஆகியன பதுக்கப்படுவதாக எனக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கஷ்டமான சூழலில் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுதன் மூலம்தான் இந்த கஷ்டமான சூழலை கடந்துவர முடியும். இந்த சூழலில், அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதேநேரம், பதுக்கல்களில் ஈடுபடவேண்டாம் என்று வணிகா்களையும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், பதுக்கலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகங்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காவல்துறையினா் கடைகளில், கிட்டங்கிகளில் அதிரடிச் சோதனைகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். மேலும், அத்தியாவசியப் பொருள்கள் பதுக்கப்படாமல் இருப்பதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படாமல் இருப்பதை இவா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT