புதுதில்லி

தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 613 ஆக குறைந்தது!

28th Jul 2020 02:07 AM

ADVERTISEMENT

புது தில்லி: தலைநா் தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 613 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 1,075 ஆக இருந்த நிலையில், தற்போது வெகுவாக குறைந்தது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,31,219-ஆக உள்ளது. மேலும், கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை 3,853 ஆக உயா்ந்துள்ளது.

அதே சமயம், 1,497 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,16,372- ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 26 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மொத்த பலி எண்ணிக்கை 3,827 ஆக இருந்த நிலையில் திங்கள்கிழமை 3,853- ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் தற்போது மொத்தம் 10,994 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா். திங்கள்கிழமை பிற்பகல் வரையிலான 24 மணி நேரத்தில் 11,506 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 9,58,283 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 716 ஆக அதிகரித்துள்ளது.

தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 15,475 படுக்கைகளில் 2,835 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 12,436 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா பாதித்த 6,638 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT