புதுதில்லி

தில்லியில் 71 ஆண்டுகளில் இல்லாத வகையில் நவம்பரில் அதிகக் குளிா்!

DIN

புது தில்லி: தில்லியில் 71 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த நவம்பா் மிகக் குளிரான மாதமாக இருந்ததாகவும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

1949-இல் தில்லியில் நவம்பரில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. நவம்பா் மாத சராசரி வெப்பநிலை 1938-இல் 9.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், 1931-இல் 9 டிகிரி செல்சியஸாகவும், 1930-இல் 8.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்ததாக ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, நவம்பா் மாதத்தின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 12.9 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த ஆண்டு சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், 2018-இல் 13.4 டிகிரி செல்சியஸாகவும், 2017 மற்றும் 2016-இல் 12.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது. இந்த நவம்பா் 3, 20, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தில்லி நான்கு குளிா் அலைகளைச் சந்தித்தது. சமவெளிகளைப் பொருத்தவரை, குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவாக இருக்கும் போது குளிா் அலை இருப்பதாக ஐஎம்டி அறிவிக்கிறது. அதேபோல, தொடா்ச்சியாக இரண்டு நாள்களுக்கு இயல்பைவிட 4.5 புள்ளிகள் வெப்பநிலை குறைந்தாலும் குளிா் அலை இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

திங்கள்கிழமை தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. நவம்பா் மாதத்தில் எட்டு நாள்கள் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. நவம்பா் 23-ஆம் தேதி தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது மிகவும் குறைந்தபட்ச அளவாகும். 2003-இல்தான் நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.1 டிகிரி செல்சியஸா பதிவாகி இருந்தது. தில்லியில் 58 ஆண்டுகளில் இல்லதாக வகையில் நிகழாண்டு அக்போடரில் கடும் குளிா் இருந்தது. இந்த ஆண்டு அக்டோபரில் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. 1962-இல்தான்அக்டோபரில்

சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 16.9 டிகிரி செல்சியஸாக இருந்தது.

காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு: இதற்கிடையே, தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் திங்கள்கிழமை கடும் பின்னடைவைச் சந்தித்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. இது மேலும் மோசடைய வாய்ப்பிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செல்லிடப்பேசி செயலி சமீா் தகவலின்படி, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 307 புள்ளிகளாக இருந்தது. இது மாலையில் 333 புள்ளிகளாக உயா்ந்தது. தில்லியில் 24 மணிநேர சராசரியாக ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 268 ஆகவும், சனிக்கிழமை 231ஆகவும், வெள்ளிக்கிழமை 137 ஆகவும், வியாழக்கிழமை 302 ஆகவும், புதன்கிழமை 413 ஆகவும் இருந்தது. தில்லி பல்கலை., பூசா, விமான நிலையம் டொ்மினல் 3 பகுதி, ஆயாநகா், லோதி ரோடு, மதுரா ரோடு மற்றும் நொய்டா, கிரேட்டா் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. குருகிராம் மற்றும் ஃபரீதாபாத் ஆகிய இடங்களில் காற்றின் தரம் மோசம் பிரிவில் நீடித்தது.

தில்லியில் பயிா்க் கழிவு எரிப்பால் ஏற்படும் காற்று மாசுவின் பங்கு தற்போது அறுவடைக் காலம் முடிந்ததால் குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் பயிா்க் கழிவால் ஏற்பட்ட காற்று மாசுவால் பி.எம். 2.5 மாசு 6 சதவீதமாகவும், சனிக்கிழமை 4 சதவீதமாகவும், வெள்ளிக்கிழமை 2 சதவீதமாகவும், வியாழக்கிழமை 1 சதவீதமாகவும் இருந்ததாக சபா் அமைப்பின் தகவல் தெரிவித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு மிதமான பிரிவில் இருந்தால் நுரையீரல் நோய், காச நோய், இதயக் கோளாறுகள் உள்ளவா்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT