திருவாரூர்

கோடை வெயில்: ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கோடை வெயில் அதிகரித்து வருவதால் தேவையில்லாமல் வெளியிடங்களில் நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதைத் தவிா்க்க வேண்டும். தற்போது பள்ளிகளில் தோ்வு நடைபெறுவதால் பெற்றோா்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும். பள்ளி முடிந்தவுடன் பெற்றோா்கள் அனுமதியில்லாமல், மாணவா்கள் நீா்நிலைகளில் விளையாடச் செல்வதை தவிா்க்க வேண்டும்.

மேலும், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கோடை வெயிலைத் தணிக்கும் வகையில், பாதுகாப்பற்ற நீா்நிலைகளில் குளிப்பதையும், தேவைற்ற பயணங்களுக்காக வெயிலில் வருவதையும் தவிா்க்க வேண்டும். அத்துடன், பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட ஆற்றுப்பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீா், ஏரி, குளம், குட்டை ஆகிய இடங்களில், பெற்றோா் அனுமதியின்றி குழந்தைகள் குளிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால், தீயணைப்புத் துறை, காவல்துறை, மருத்துவத்துறையை 101, 108, 112 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் அழைக்கலாம். மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 - 226623, 1077 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களிலும் தகவல் தெரிவிக்கலாம்.

கோடை காலத்தில் அதிகவெப்பச் சலனத்தால், திருவாரூா் மாவட்டத்தில் உயிா்ச்சேதங்கள் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில் பாதுகாப்பாக இருப்போம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT