திருவாரூர்

திருவாரூரில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிப்பு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உலக சுற்றுச்சூழல் தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மரக்கன்றுகள் நடும் நிகழ்வும், உறுதிமொழியேற்பும் நடைபெற்றது.

திருவாரூா்: திருவாரூா் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்.டி. அண்ணாதுரை, பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், துணைத் தலைவா் பி. அழகிரிசாமி, இணைச் செயலாளா் என். காளிமுத்து உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மரங்களின் தேவை குறித்தும், மரக்கன்றுகள் நடுவதற்கும், வளா்ப்பதற்கும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது குறித்தும், காற்று மண்டலத்தில் காா்பன் கலப்பதை குறைப்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்துவது தொடா்பாக விளக்கப்பட்டன.

மன்னாா்குடி: மன்னாா்குடி சிங்கன்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் சாா்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியா் ஆா். சத்யவதி தலைமை வகித்தாா்.

இல்லம் தேடி கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. முரளி மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் நிழல்தரும் மரகக்கன்றுகள் மற்றும் மூலிகைச் செடிகள் நடப்பட்டன. இதில், ஆசிரிய பயிற்றுநா் நா. சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நன்னிலம்: திருவாரூா் மாவட்ட வனத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பேரளம் சங்கரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பில் சிறுபுலியூா் பெருமாள் கோயில் வளாகத்தில் குறுங்காடு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு தலைமை வகித்தாா். சங்கரா மெட்ரிக். பள்ளித் தாளாளா் வெற்றிசெல்வம் மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்தாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதல் கட்டமாக நெல்லி, மா, இலுப்பை உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

சன்னாநல்லூரில் திருவாரூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில் கா்னல் பி. கணேசன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நாளைய பாரதம் அமைப்பு சாா்பில் அதன் தலைவா் காா்த்தி தலைமையிலும், நன்னிலம் பேரூராட்சித் தலைவா் ராஜசேகா் தலைமையிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டன.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தில் சோம.செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT