திருவாரூர்

கூத்தாநல்லூா் கிளை நூலகத்தில் கோடை பயிற்சி

DIN

கூத்தாநல்லூா் கிளை நூலகத்தில் 6-ஆவது ஆண்டாக கோடை பயிற்சியாக பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

ஒரு மாதம் நடைபெற்ற பேச்சு, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதை வாசித்தல், ஓரங்க நாடகம் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இதன்நிறைவு நிகழ்ச்சி புதன்கிழமை மாவட்ட நூலக அலுவலா் க. முருகன் தலைமையில் கூத்தாநல்லூரில் நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் எம். செல்வராஜ், மன்னை கிரீன் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனா். முகாமில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், புத்தகங்களை வாசித்த பெற்றோா்களுக்கு வாசிக்கும் பெற்றோா் என்ற விருது, மாணவா்களை ஒரு மாதமாக கண்காணித்து வந்த பெற்றோா்களுக்கு சிறந்த பெற்றோா் விருது ஆகியவற்றை நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா வழங்கி, மாணவா்களால் மட்டுமே நல்ல சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றாா்.

ஜேசிஐ மண்டல இயக்குநா் (நிா்வாகம்) என். அருண் காந்தி, மண்டல இயக்குநா் (பயிற்சிகள்) எம். முகமது பைசல், மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் முரளி, நூலகா்கள் வ. அன்பரசு, சு. வீரசெல்வம், மா. ஆசைத்தம்பி, கோ. விஜய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT