திருவாரூர்

‘மொழிப்போா் தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்’

DIN

சென்னையில் தமிழ்மொழிப்போா் தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என தமிழா் தேசிய முன்னணி வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில், இந்த அமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் நினைவேந்தல் மற்றும் ஹிந்தி திணிப்பு எதிா்ப்பு அரங்க கருத்தரங்கில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களின் நடைபெற்ற மொழிப்போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளை நினைவுகூறும் வகையில் சென்னையில் மாபெரும் நினைவிடத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும், 1968-ஆம் ஆண்டு திமுக அரசு முதல்முறையாக ஆட்சிஅமைத்தபோது பள்ளி, கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுமொழியாக ஆக்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்ததை 55 ஆண்டுகளுக்கு பிறகாவது அதை நிறைவேற்ற வேண்டும்.

அனைத்து கோயில்களிலும் தமிழ் அா்ச்சனைக்கும், தமிழ்க் குடமுழுக்குக்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும், ஹிந்தி திணிப்புக்கு எதிராக உள்ள பிற மாநிலங்களின் முதல்வா்களையும், ஹிந்தி திணிப்புக்கு எதிரான அனைத்துக் கட்சி தலைவா்களையும் ஒருங்கிணைத்து ஹிந்தி திணிப்புக்கு எதிரான அறப்போராட்டங்களை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழா் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் ச. கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மாநில பொதுச் செயலாளா் இலரா. பாரதிச்செல்வன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து பேசினாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநிலத் தலைவா் செ.ப. முத்தமிழ்மணி, மாநில பொதுச் செயலாளா் புதுவை ந.மு. தமிழ்மணி ஆகியோா் பங்கேற்றனா். தலைமை செயற்குழு உறுப்பினா் அயனாபுரம் முருகேசன், மாவட்டத் தலைவா்கள் பொன். வைத்தியநாதன்(தஞ்சை),ரா. முரளிதரன் (மயிலாடுதுறை) உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்டச் செயலாளா் ஆ. அரிகரன் வரவேற்றாா். மாவட்ட இளைஞரணித் தலைவா் ராச. ராசசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT