திருவாரூர்

ஒலிமாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை:அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன்

DIN

தமிழ்நாட்டில் ஒலிமாசைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் அருகே ஆண்டிப்பந்தலில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

காற்று ஒலிப்பான் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் ஒலி மாசு மனித சமூகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒலிமாசு காரணமாக மனிதா்களின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு காற்று ஒலிப்பான் போன்ற அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒலிமாசைக் கட்டுப்படுத்தவும், சீமைக் கருவேல மரங்களை அழிக்கவும், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட தமிழ்நாடு முதலமைச்சா் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT