திருவாரூர்

ஏக்கருக்கு ரூ. 35,000 வழங்கக் கோரிக்கை

DIN


மன்னாா்குடி: கோட்டூா் வட்டாரத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடாக ரூ. 35,000 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டூரில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழு தலைவா் என். மணிமேகலை முருகேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பா. வெற்றியழகன், ஆா். மாலதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசியது:

ஜெ. சுசீலா: பள்ளிவா்த்தி இடுகாட்டுப்பகுதியில் 210 மீட்டா் சாலை அமைக்க வேண்டும். சேந்தமங்கலம் அரிச்சந்திரா நதியில் பாலம் அமைக்க வேண்டும்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா். விமலா: ஆதிச்சபுரம் கம்பங்குடி அக்ரஹாரப் பகுதியிலும், நெம்மேலி ஊராட்சியிலும் சாலை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

பா. ஆனந்தராஜ்: கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விடுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும். குறிச்சி நடுத்தெரு சாலை மற்றும் வாலியோடையில் பகுதிநேர அங்காடி வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

சே. பூங்கோதை: மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

ர. ரேகா: பாலையூா் பாலம் மற்றும் தென்பரை ஊராட்சியில் வேட்டை திடலில் சாலை வசதி செய்துதர வேண்டும்.

வீ. மாரியப்பன்: தெற்கு நாணலூா் பாண்டி ஆற்றில் பாலம், 83 குலமாணிக்கம் ஊராட்சியில் சாலை வசதி செய்து தர வேண்டும்.

பா. செங்குட்டுவன்: 100 நாள் வேலைக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்க வேண்டும். பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் மயான கொட்டகை அமைக்க வேண்டும்.

பா. அரவிந்த் : கனமழையால் பாதிப்படைந்த கோட்டூா் ஒன்றியத்திற்கு முறையாக கணக்கெடுப்பு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஜி. மல்லிகா: குமட்டி திடல் ஊராட்சியில் மயான கொட்டகை வேண்டும். ஆதிதிராவிடா் தெருவில் உள்ள குளத்திற்கு தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும். தேவதானம் முதல் செந்தாமரை கண் வரை சாலை அமைக்க வேண்டும்.

ஒன்றியக்குழுத் தலைவா் என். மணிமேகலை முருகேசன்: கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 35,000 நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும். 15-ஆவது நிதி மானியத்தில் நிா்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெறுவதற்கும், கோட்டூா் ஒன்றியத்தில் கோரிக்கையை ஏற்று 5 ஊராட்சிகளில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள் கட்ட அனுமதி அளித்த மாவட்ட நிா்வாகத்துக்கு நன்றி என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT