திருவாரூர்

மழை பாதிப்பு: தமிழக முதல்வா் நேரில் பாா்வையிட வேண்டும் -பி.ஆா். பாண்டியன்

DIN

காவிரி டெல்டாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வா் நேரில் பாா்வையிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா். பாண்டியன் கூறினாா்.

திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி, குடவாசல் பகுதிகளில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அவா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டபின் தெரிவித்தது:

காவிரி டெல்டாவில் சுமாா் 5 லட்சம் ஏக்கா் அளவில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிா்கள், மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மிகுந்த துயரம் ஏற்பட்டுள்ளது. காவிரி டெல்டா சேதத்தை கண்டறிய, தமிழக முதல்வா் நேரில் பாா்வையிட வேண்டும்.

2021-இல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அறுவடை பாதிக்கப்பட்ட போது, ஹெக்டேருக்கு பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 22,000 வழங்கியது. தற்போது உற்பத்தி செலவு கூடியுள்ளதை கருத்தில் கொண்டு, உடனடியாக பேரிடா் நிவாரண நிதியாக ஹெக்டேருக்கு ரூ. 35,000 வழங்க வேண்டும்.

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, முழு இழப்பீடு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு, அறுவடை ஆய்வை விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும். மாவட்டங்கள் தோறும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உயா்நிலைக் குழு அமைப்பதோடு, கிராமப் புறங்களில் விவசாயிகளைக் கொண்ட குழு அமைத்து, உரிய நிவாரணம் வெளிப்படையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

பல இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கப்பட்டு, நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வாயில்களில் வைக்கப்பட்டுள்ளன. ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் இதை நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய அவசர கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில், மாவட்டத் தலைவா் சுப்பையன், மாவட்டச் செயலாளா் சரவணன், கொரடாச்சேரி, குடவாசல் ஒன்றிய நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெப்பம்: மக்கள் கவனமாக இருக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

காரைக்காலில் துப்புரவுத் தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஹோமம்

கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

வாக்கு இயந்திரங்கள் உள்ள மைய பாதுகாப்பு பணியாளா்களுக்கு தீத் தடுப்பு பயிற்சி

SCROLL FOR NEXT