திருவாரூர்

கமலை ஞானப்பிரகாசா் குருமூா்த்த கோயில் கும்பாபிஷேகம்

DIN

திருவாரூரில் உள்ள கமலை ஞானப்பிரகாசா் குருமூா்த்த கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுர ஆதீனத்தை நிறுவிய ஸ்ரீகுருஞான சம்பந்தரின் குருவான கமலை ஸ்ரீஞானபிரகாசா் குருமூா்த்த அனுஷ்டானம் (சமாதி) திருவாரூா் காட்டுகாரத்தெரு ஓடம்போக்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சிதிலமடைந்த இந்த அனுஷ்டானம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான 2 கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. யாகசாலை பூஜையின் நிறைவாக மகாபூா்ணாஹூதி புதன்கிழமை நடைபெற்று, தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து, யாகசாலையிலிருந்து புனித தீா்த்தக் கடங்கள், கமலை ஸ்ரீஞானப்பிரகாசரின் அனுஷ்டானத்தை வலம்வந்து, விமான கலசத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து, விமான கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாா்ய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாா்ய சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT