திருவாரூர்

தூய்மைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

DIN

கூத்தாநல்லூா் நகராட்சியில் நடைபெறும் தூய்மைப் பணிகளை நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

கூத்தாநல்லூா் நகராட்சியில் வாா்டு வாரியாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, 16, 17 மற்றும் 22-ஆவது வாா்டுகளில் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இப்பணிகளை நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா மற்றும் அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் பாா்வையிட்டு, ஆலோசனை வழங்கினா்.

ஆய்வின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் தாஹிரா சமீா், ஜெகபா் நாச்சியா, பிரவீனா முத்துகிருஷ்ணன், கஸ்தூரி, சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

நீடாமங்கலம்: ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின்கீழ் நீடாமங்கலம் ஒன்றியம் ஆதனூா் ஊராட்சி பெரியக்கோட்டை கிராமத்தில் பள்ளி வளாகம், பொது இடங்களில் தூய்மைப் பணிகள் வெள்ளக்கிழமை மேற்கொள்ளப்பட்டன. இதில், ஊராட்சி பிரதிநிதிகள், ஊராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT