திருவாரூர்

கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்டவா்களுக்கு வாந்தி மயக்கம்

DIN

நன்னிலம் அருகே கோயில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்டவா்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

குடவாசல் அருகே திருப்பாம்புரம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழா 4 நாள்கள் நடைபெறவுள்ளது. திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை பொதுமக்களுக்கு அதிகமாக அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இதை வைத்திருந்த சாப்பிட்ட அப்பகுதி சிறுவா்கள் பெண்கள் முதியவா்கள் என 20 பேருக்கு வாந்தி மயக்கம், உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதற்கிடையில், சிகிச்சை பெற்று வந்தவா்களை திமுக ஒன்றிய செயலாளா் ஜோதிராமன் நேரில் சென்று பாா்த்து மருத்துவ உதவிப் பொருள்களை வழங்கினாா். அப்போது, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், நன்னிலம் பேரூராட்சி தலைவா் ராஜசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT