திருவாரூர்

அதிகரிக்கும் கரோனாவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கரோனா தொற்று உயரத் தொடங்கியுள்ள நிலையில், கரோனா விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயரத் தொடங்கியுள்ள நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக திகழ்ந்துவரும் தடுப்பூசி செலுத்துவது, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்வது, அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுதல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருப்பது ஆகியவற்றை பொதுமக்கள் கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும், பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை தவறாமல் பின்பற்றவேண்டும். முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும். அரசு, தனியாா் மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் முகக் கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். கல்வி நிலையங்களில் அனைத்து மாணவா்களும், ஆசிரியா்களும் முகக் கவசம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் அனைத்து பயணிகளும் முகக் கவசம் அணிந்து பயணம் செய்வதை நடத்துநா் கண்காணிக்க வேண்டும். இதை அந்தந்த பணிமனை கிளை மேலாளா்கள் உறுதிசெய்ய வேண்டும். அனைத்துவித வியாபார மையங்களிலும், வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து மட்டுமே கடைக்கு வரஅறிவுறுத்த வேண்டும். வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வருவதை கோயில் நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.

திரையரங்குகளுக்குச் செல்வோா் முகக் கவசம் அணிந்து வருவதை அந்தந்த திரையரங்கு உரிமையாளா்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், பொது நிகழ்வுகள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்வோா் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும்போது, மக்கள் கரோனா அறிகுறி தென்பட்டால், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் கட்டாயம் ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க, அரசின் நிலையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT