திருவாரூர்

மன்னார்குடி: திமுக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரதம் 

5th Jul 2022 01:34 PM

ADVERTISEMENT

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பாஜக மாவட்டத் தலைவர் ச.பாஸ்கர் தலைமை வகித்தார்.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது . மனசாட்சி இல்லாத , மக்கள் விரோத அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு வருவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: சென்னையில் கரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது?

கட்சியின் மாவட்டத் தலைவர் பேட்டை பி.சிவா போராட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

ADVERTISEMENT

மாவட்ட பொதுச் செயலர்கள் வி.கே.செல்வம், ஓபிசி அணி மாவட்டத் தலைவர் பால.பாஸ்கர் , சிறுபான்மை அணி மாவட்டத் தலைவர் கமாலுதீன் , மாநில பொதுக்குழு உறுப்பினர் க.சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி.எஸ்.கண்ணன், எம்.ராகவன் , பட்டியல் அணி மாநில துணைத் தலைவர் கோ.உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலர் சிவ.காமராஜ், நகரத் தலைவர் ஆர்.ரகுராமன், நகரச் செயலர் யு.கோகுல் உள்ளிட்ட நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT