திருவாரூர்

குடியரசு தினம்: விடுப்பு அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

DIN

 குடியரசு தினத்தில் விடுப்பு அளிக்காத 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

குடியரசு தினத்தில் திருவாரூா், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் திருவாரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தலைமையிலான தொழிலாளா் துறை அலுவலா்கள் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 91 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், 21 கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் 12 உணவகங்கள் என மொத்தம் 33 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு செய்து பணியாளா்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது மாற்று விடுமுறையோ, அளிக்காமல் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT