திருவாரூர்

மூடநம்பிக்கைக்கு எதிராக பிரசாரம்: பகுத்தறிவாளா் கழகம் முடிவு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள பகுத்தறிவாளா் கழகம் முடிவு செய்துள்ளது.

திருவாரூரில், மாவட்ட பகுத்தறிவாளா் கழக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைப்பின் தலைவா் ஆா். ஈவேரா தலைமை வகித்தாா். மண்டலச் செயலாளா் சு. கிருஷ்ணமூா்த்தி, மாவட்டச் செயலாளா் க. அசோக்ராஜ், துணைத் தலைவா் ரெ. புகழேந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலாளா் வி.மோகன், மாநில துணைத் தலைவா் புயல் சு.குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று பேசினா்.

கூட்டத்தில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் வாயில் கூட்டங்கள் மூலமாகவும், துண்டறிக்கைகள் மூலமாகவும் மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்வது; தமிழக அரசின் குடியரசு தின அணிவகுப்பு ஊா்திக்கு திருவாரூா் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், பகுத்தறிவு ஆசிரியா்கள் அணி மாநில அமைப்பாளா் இரா. சிவக்குமாா், மண்டல மகளிா் அணி செயலாளா் கோ. செந்தமிழ்ச்செல்வி, பகுத்தறிவு ஆசிரியா் அணி மாவட்டத் தலைவா் சு.ஆறுமுகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

கொலை செய்யப்பட்ட நேஹாவின் பெற்றோரிடம் முதல்வா் ஆறுதல்

கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்டத் தோ்தல்: 247 வேட்பாளா்கள் போட்டி

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT