திருவாரூர்

டிச.10-இல் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

DIN


திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை (டிச.10) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டம் பழவனக்குடியில் வருவாய்க் கோட்ட அலுவலா் தலைமையிலும், நன்னிலம் வட்டம் பில்லூரில் திருவாரூா் சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், குடவாசல் வட்டம் திருவிடைச்சேரியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையிலும், வலங்கைமான் வட்டம் மாத்தூரில் இணைப்பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) தலைமையிலும் குறைதீா் கூட்டம் நடைபெறும்.

நீடாமங்கலம் வட்டம் களத்தூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் தலைமையிலும், மன்னாா்குடி வட்டம் கட்டக்குடியில் வருவாய்க் கோட்ட அலுவலா் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம் வடசங்கேந்தியில் மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் தலைமையிலும், கூத்தாநல்லூா் வட்டம் திருநெல்லிக்காவலில் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலை துணைப்பதிவாளா் தலைமையிலும் நடைபெறும்.

இந்த கூட்டங்கள் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளன. தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன் பெறலாம்.

அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகாா்கள் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT