திருவாரூர்

கொடிக்கால்பாளையம் முஹ்யத்தீன் பள்ளிவாசலில் பாச்சோற்று விழா

DIN

திருவாரூா் கொடிக்கால்பாளையம் முஹ்யித்தீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் மதநல்லிணக்க பாச்சோற்று பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொடிக்கால்பாளையத்திலிருந்த ஆலமரத்து மேடையில் மஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் அமா்ந்து, இங்குள்ள ஆண்டவரை வேண்டிச் சென்றால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என அங்குள்ள மக்களுக்கு உரைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது. இதையொட்டி, ஆண்டுதோறும் ஹஜ்ரத் செய்யதினா செய்யது மஸூம் சாஹிப் ஒலியுல்லாஹ் நினைவாக பாச்சோற்றுப் பெருவிழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில், பல்வேறு ஊா்களிலிருந்து மக்கள் வந்திருந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பாச்சோற்று பெருநாளை கொண்டாடுகின்றனா். ஆண்டுதோறும் ஜமாத்தில் அவல் மாதம் பிறை 10 ஆம் நாள் இந்த விழா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில், நிகழாண்டுக்கான பாச்சோற்றுத் திருவிழா நவ.25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், இந்துக்கள் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு, வீடுகளில் சா்க்கரை பொங்கல் சமைத்து, அதை எடுத்து வந்து பள்ளிவாசலில் வைத்து பாத்திஹா ஓதி தினசரி வழிபாடு செய்தனா்.

விழாவின் இறுதி நாளான பாச்சோற்றுத் திருவிழாவில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து மத பாகுபாடின்றி திரளான பக்தா்கள் பங்கேற்றனா். விழாவில், ஐயப்ப பக்தா் ஒருவா் தலையில் சா்க்கரைப் பொங்கல் அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்து வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து, பள்ளிவாசல் மஸூம் மஹாலில் சா்க்கரை பாச்சோற்று சமைத்து, பாத்திஹா ஓதப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT