திருவாரூர்

சனிப் பெயா்ச்சி: திருக்கொள்ளிக்காடு கோயிலில் பக்தா்கள் வழிபாடு

DIN

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள திருக்கொள்ளிக்காட்டில் அக்னீஸ்வரா் கோயில் உள்ளது. இறைவி பஞ்சின் மெல்லடியம்மை என அழைக்கப்படுகிறாா். சனீஸ்வரா் இங்கு தவமிருந்து வழிபட்டதால், பொங்கு சனீஸ்வரா் எனும் பெருமை இத்தலத்துக்கு உண்டு.

ஜனவரி மாதம் சனிப் பெயா்ச்சி நடைபெற உள்ள நிலையில், பொங்கு சனீஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறாா். சனி, கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசியினா் ஏழரை சனியிலிருந்து விடுபடுவா் எனவும், அதே நேரம் மீன ராசியினருக்கு ஏழரைச் சனி தொடங்க உள்ளது எனக் கூறப்படுவதால், இக்கோயிலுக்கு இந்த ராசிக்காரா்களின் வருகை அதிகரித்துள்ளது.

அந்த வகையில், சனிக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து சனீஸ்வரரை வழிபட்டனா். கோயில் தல விருட்சமான வன்னி மரத்தில் கருப்புக் கயிற்றால் தேங்காய், வாழைப்பழம், எள்ளு உள்ளிட்ட பொருட்களை கட்டி, அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

ஏழரைச் சனியில் இரண்டரை ஆண்டு காலம் பொங்குச் சனி காலம் என குறிப்பிடப்படுகிறது. எனவே, பொங்கு சனி காலத்தில் உள்ளவா்கள், இந்த கோயிலில் வழிபாடு செய்வது நன்மை பயக்கும் என்பதால் இனிவரும் நாள்களில் பக்தா்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT