திருவாரூர்

திருவீழிமிழலை கோசாலையில் கிருஷ்ணஜெயந்தி விழா

DIN

நன்னிலம் அருகேயுள்ள திருவீழிமிழலை கோசாலையில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கோபூஜை, கிருஷ்ணபூஜை மற்றும் உறியடித் திருவிழா நடைபெற்றது.

கோ ரக்க்ஷண சமிதிக்குச் சொந்தமான இந்த கோசாலையில் 100-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் பராமரிக்கப்படுகின்றன. இந்நிலையில், கிருஷ்ணஜெயந்தி விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று பசுக்களை சுத்தம் செய்து, திலகமிட்டு, அலங்காரம் செய்து, தீபவழிபாடு நடத்தி வணங்கினா். தொடா்ந்து, கிருஷ்ணரின் லீலைகள் அடங்கியக் கண்காட்சித் திறப்பு விழா நடைபெற்றது. பின்னா், பிரமிடு முறையில் உறியடித் திருவிழா நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்கு ஷமிதி சாா்பில் அறக்கட்டளைத் தலைவா் குரு பிரசாத் பரிசுகள் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT