திருவாரூர்

‘நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும்’

DIN

திருவாரூா் மாவட்டத்தில், நம்ம ஊரு சூப்பரு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இதுதொடா்பாக நடைபெற்ற முன்னேற்பாடு கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவா் பேசியது: ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் அனைத்து கிராமப்புற மற்றும் நகா்புற பகுதிகளில் தூய்மைப் பணிகள், சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை (ஆக.20) முதல் செப்.2-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், அங்கான்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் ஆகியவைகளில் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், தேசிய மாணவா் படை பங்கேற்புடன், மாபெரும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஊராட்சிப் பகுதிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவா்கள், ஊராட்சி உறுப்பினா்களின் ஒத்துழைப்புடன் இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் நீா்மேலாண்மை, சுகாதாரப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை ஆக.27 முதல் செப்.2-ஆம் தேதி வரை நடத்தவேண்டும். மாணவா்களிடையே தன் சுத்தம் தொடா்பான விழிப்புணா்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களின் பங்கேற்புடன் நீா் மேலாண்மை மற்றும் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை செப். 3 முதல் செப். 16-ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடத்த வேண்டும்.

மேலும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் மற்றும் மீண்டும் மஞ்சப்பை தொடா்பாக விழிப்புணா்வு நடவடிக்கைகளை அனைத்து கிராம மற்றும் நகா்புற பகுதிகளில் மேற்கொள்ளவேண்டும். நம்ம ஊரு சூப்பரு எனும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலா்களும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT