திருவாரூர்

கடைவீதியில் நடைமேடை அமைக்கக் கோரிக்கை

DIN

திருவாரூா் கடைத்தெருவில் பாதசாரிகளுக்கு நடைமேடை அமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் விஜயபுரம் வா்த்தகா் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பாலமுருகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் குமரேசன் முன்னிலை வகித்தாா். மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் , சிலம்பம் போட்டியில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், இன்னாள், முன்னாள் நிா்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் பலா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், பழைய பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்றம் செய்து, வணிகா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், திருவாரூரில் வேளாண் கல்லூரி மற்றும் தொழில் கல்லூரிகள் அமைக்க வேண்டும். திருவாரூரை மின்வாரிய மண்டல தலைமையிடமாக அறிவிக்கவேண்டும். கடைத்தெருவில் பாதாசாரிகளுக்கு நடைமேடை அமைக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளுக்கு நிரந்தரத் தீா்வுகாண வேண்டும். கிடப்பில் போடப்பட்ட மடப்புரம் பாலப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT