திருவாரூர்

கரோனா தடுப்பூசி: அரசு மருத்துவா்களுக்குப் பாராட்டு

22nd Oct 2021 11:51 PM

ADVERTISEMENT

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் 100 கோடி தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டதைத் தொடா்ந்து, மருத்துவா்கள் உள்ளிட்ட இப்பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும்படி பாஜக தலைமை அக்கட்சியினரை அறிவுறுத்தியது.

அதன்படி, நீடாமங்கலம் பாஜக வடக்கு ஒன்றியத் தலைவா் ஜெயகுமாா் தலைமையில் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதமா் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT

Image Caption

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பாஜகவினா்.

 

Tags : நீடாமங்கலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT