திருவாரூர்

பட்டாசு கடை வைக்க அக்.27-வரை விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க அக்.27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசின் அறிவிப்புபடி தீபாவளியையொட்டி, 30 நாள்களுக்கு பட்டாசு கடை வைக்க தற்காலிக உரிமங்களை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இ.சேவை மையம் அல்லது பொது சேவை மையங்களில், கடை அமைக்கவுள்ள இடத்தின் வரைபடம் (அசல்), இடத்தின் உரிமை குறித்த ஆவணங்கள் (அசல் மற்றும் 5 நகல்கள்), ரூ.500-க்கான அசல் செலுத்துச் சீட்டு, முகவரிக்கான சான்று (குடும்ப அட்டை, பான் காா்டு, ஆதாா் காா்டு இவைகளில் ஏதேனும் ஒன்று), உள்ளாட்சி அமைப்பின் ரசீது, பாஸ்போட் அளவு புகைப்படம் (2) ஆகிய ஆவணங்களுடன் அக்.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் மீது காவல், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலா்களால் வெடிபொருள் சட்டத்தின்படி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்படும். எனவே, தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விருப்பமுள்ளவா்கள் அக்.27-ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT