திருவாரூர்

பள்ளி வேலை நாள்களை 5 நாள்களாக மாற்றக் கோரிக்கை

DIN

ஐந்து நாள்கள் மட்டுமே பள்ளி வேலை நாள்களாக இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ். துரைராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஆா்.முத்துவேல், மாவட்ட பொருளாளா் கே.கருணா காளிதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், மாநில பொருளாளா் அ.ஜான் உபால்ட், மாநில துணைத் தலைவா் எஸ். சந்தானகிருஷ்ணன், மாநிலச் செயலாளா் முருகேசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

பள்ளி வேலை நாள்கள் வாரத்துக்கு 5 நாள்களாக மட்டுமே இருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு, பதவி உயா்வு கலந்தாய்வு ஆகியவை உடனே நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT